Wednesday, March 5, 2008

பெயர் காரணம்:

பெயர் காரணம்:

ரெம்ப பேரு, எனக்கு ஏன் மண்வெட்டியானு எங்க அய்யா பேரு வசிருக்காருனு நான் எங்க போனாலும் கேக்குரனுங்க... அது ஏன்-னு எங்க அய்யா கிட்ட நான் கேட்டதே இல்ல.. நான் என் அய்யா கிட்ட வார்த்தைல எல்ல்லாம் பேசுறது இல்ல... நம்பர்ஸ் ஒன்லி.. புரிளியா ?
"அய்யா, ஒரு 200 கொடு , புக்க ஜெராக்ஸ் எடுக்கணும்" "47 ரூவா 50 காசு கொடு பெட்ரோல் போடணும் ". இப்படி தான். நாங்க வேற எதுவும் பேசினா அடி தடில தான் முடியும்.. "டேய் நீ நேத்து காலேஜுக்கு போகல போல... தங்க ரீகல்-ல உண்ண பார்த்த தங்க ராசு சொன்னானே ". அம்புட்டு தான்... தங்க ராசு செத்தான். சும்மாவா , அவன் என்னைய விட 8 வயசு சின்ன பய்யன். அடி வெளுத்து புட மாட்டேன் ...

நான யோசிச்சு பார்த்தேன் :

1. நான் பிறந்த உடனே எங்க ஆத்தாவுக்கு " உன் பய்யன் எதையும் வெட்டி கிழிக்க போறதில்ல னு" மரியத்ததா சாமி வது சொல்லி இருக்கணும்

2. இந்தியா ல இருந்து வர பசங்களுக்கு எல்லாம் 'அமித்' , 'வினய்' 'அகர்வால்' ' ஷர்மா' னு தான் பேர் இருக்கும்னு நெனச்சுகிட்டு இருக்கிற வெள்ள கார பசங்கள பத்தி எங்க அய்யாவுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கணும். என் அய்யா நெனசிருப்பறு, நம்ம பய்யன் வெளி நட்டு பசங்கள அசத்தனும்னு ... இப்ப பாருங்க " ஹாய் டியுட், ஐ யாம் மண்வெட்டியான், ப்றோம் இந்தியா" னு சொன்ன எம்புட்டு சூபெற இருக்கு..

3. எனக்கு இந்த பேரு வச்ச எங்க அய்யாவுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும். எம்புட்டு
பெரிய மனுஷன் பாஸ் போர்ட்ட காம்பிசாலும் உம்ம்னு இருக்குர இந்தியன் இம்மிகிரசன் ஆபிசெர்' என் பேர் பாஸ் போர்ட்ட்ள பற்றது கொஞ்சம் சிரிக்கிறாங்க ....

2 comments:

said...

//
தங்க ரீகல்-ல உண்ண பார்த்த தங்க ராசு சொன்னானே ".
//
தங்க ரீகலுக்கு வந்திருந்தால் என்னை தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையே... தறிகெட்டு ஓடுற எண்ணக்குதிரையை நிறுத்துப்பா... நான் எதிர் பக்கம் இருக்குற ஸ்வீட் கடையில தினமும் சூடான அல்வா சாப்பிட வருவேன் அதனால சொன்னேன். ஸ்ஸூ... மக்கள் ஒரு செகன்டுல என்னென்னத்த நெனய்க்குறாய்ங்கய்யா....!!!

களப்பிராருக்கும் தங்களுக்கும் என்ன கனேசன்???

பி.கு: எனக்கு யாரோ கூறியதை இங்கு தங்களுக்கு கூறுகிறேன்... Comment Moderation இருக்க word verification கனியிருப்ப காய் கவர்ந்தற்று!

said...

3!!

//அவன் என்னைய விட 8 வயசு சின்ன பய்யன். அடி வெளுத்து புட மாட்டேன் ...//

அப்பறம், எப்பிடிதான் நம்ம வீரத்தக் காட்றது? :)