Saturday, June 14, 2008

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்
பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .
விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !
அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

Thursday, June 12, 2008

தசாவதாரம் படம் பார்ப்போர் - உணர்ச்சி கருத்துகள்


இதே மாதிரி உங்க ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளும் வந்துட்டா நல்ல இருக்கும் !!


எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது ?? ஒரிஜினல் ஓட சாயலே தெரியாம படம் பண்ணிருக்க !!
எங்க காலத்துல சீடி, டிவிடி, இன்டர்நெட் இப்படி எதுவுமே கிடைக்கல. சொந்தமா யோசிக்கவேண்டியதா போச்சு ...

இந்த போட்டோவுக்கு நீ 'ஓட்டி' கமெண்ட்டு எழுதிடுவியாடா??


தலைவா, கருப்பு சட்டையோட வந்து உங்கள மடக்கிடோம்ள. நம்மள பத்தி எதுவும் பேச முடியாது !!!

நன்றி
படங்களை வெளியிட்ட நன்றிக்குரியவர் சின்னகுட்டிThursday, May 29, 2008

லக்கி லுக் அவர்களுக்கு கண்டனம் !!

முதல் கண்டனம், இன்று எந்த பதிவையும் எழுதாதற்கு. நானும் எத்தன தடவ தான் தமிழ்மணம் பக்கத்த ரெபிரஷ் பண்ணி பாக்குறது...
விடுமுறை என்றால் முதலிலே ஒரு அறிவிப்பு செய்து, எங்களிடம் அனுமதி வாங்க வேண்டாமா ??? இன்மேல் வரும் பொழுது 'வீட்டில் இருந்து' லீவ் லெட்டர் வாங்கி வர வேண்டும். வீட்டுகர அம்மா கையொப்பமும் அதில் இருக்க வேண்டும்.

இரண்டாம் கண்டனம் , 'ஜந்து என்று சொல்லடா' என்ற பாடலை அழித்து விட்டதற்கு. அந்த பாடல் மிக நன்றாக எழுதப்பட்ட ஒன்று. அது ஏன் எழுதப்பட்டது என்று எனக்கு இன்று தான் புரிந்தது. தயவு செய்து அதை மறு பதிப்பு செய்யவும்.

அந்த பாடலிற்கு மெஸ் காரர் பரிசு தருவாரோ இல்லையோ, நாங்கள் தருகிறோம். என்ன பரிசு என்பதை பின்னூட்டம் இடும் நபர்கள் - அனானி தவிர மற்றவர்கள் - தீர்மானிப்பார்கள் .

Friday, April 4, 2008

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவா,

நீங்க என்னிக்கோ எப்பவோ தான் எங்களுக்கு சார்பா உருப்படியா பேசுறீங்க...

நீங்க பாட்டுக்க "கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார்" னு மொட்டைய சொல்லிட்டு போய்டீங்க..

இங்க பாருங்க, யாஹூ காரன் எப்படி எழுதுரானு

http://in.tamil.yahoo.com/News/Regional/0804/04/1080404029_1.htm

எனது மரியாதைக்குரிய தலைவர் ஒருவர், உயர் பதவியில் இருந்தவர் (எஸ்.எம்.கிருஷ்ணா ) மும்பையிலிருந்து தனது மாநிலத்துக்கு சென்று அவரும் பிரச்சனையை தூண்டி வருகிறார்.

நம்ம தமிழ்மண நண்பர் எப்படி சொல்லுராருனா

http://girirajnet.blogspot.com/2008/04/blog-post_4985.html

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல்.

இப்படி ஆளு ஆளுக்கு ஒன்ன சொல்லுறாங்க..
இப்ப பாருங்க உங்களால மதிக்க படுற தலைவரு யாருனே தெரியாம போச்சு...

ஆப்பு ஆறுமுகம் கேள்வி:

நம்ம மாதிரி சாமானியனுக்கு பேர சொன்னாலே கர்நாடக முதலமைச்சர் தெரியாது... இதுல ஆந்தையார் மாதிரி சொல்லுகிர்ரர்..
குசேலன் படம் ப்ரோடச்சன் ஸ்டேஜ் ல இருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்குமோ ??

சரி விடுங்கப்பா... அரசியலில இதெல்லாம் சகஜம்... யாரும் யாரையும் பகைச்சுக்க மாட்டாங்க...

Thursday, April 3, 2008

தாங்க முடியாத குசேலன் சஸ்பென்ஸ்...


அஞ்சுமே தலைவருக்குதானோ ??
நாலா இருக்குமோ ??
இல்ல ரெண்டே ரெண்டு தானா ??
அநேகமா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்திருமோ..?
இல்ல எதுவுமே இல்லாம பெரிய புரட்சியா இருக்குமோ ?

இப்படியே ராப் பகலா யோசிச்சிட்டு இருக்கேன்... தூக்கம் போய் ரெம்ப நாள் ஆச்சு !
கண்ணு எல்லாம் செவந்து போச்சு...எங்க அப்பு நைட்டு எல்லாம் குவார்ட்டர் அடிசியாடா நாயே னு என்ன அடிக்க வாரார்... ( குவர்டார் எல்லாம் 10 நிமிசத்துக்கு கூடா வராதுன்ன்ற ஜெனரல் நாலட்ஜ் கூட அந்த ஆளுக்கு இல்ல )


அத வாசு சார் சொன்னத படிச்சு கிட்டு இருக்குறப்பவே நான் சீட் நுனிக்கு வந்திட்டேன்.
சார், தயவு செஞ்சு சொல்லிடுங்க சார்... பிளீஸ் .. எனக்கு தலையே வெடிச்சுடும் ...

மொத்தமே நாப்பது மார்க்குக்கு பதில் எழுதிட்டு பாஸ் மார்க் வந்துடுமோ வராதோ ன்ற மாதிரி இருக்கு... எனக்கு பொறுமை இல்ல சார்.

அதுல மொத்த பாட்டு அஞ்சு னு வேற சொல்லிடீங்க... அதுல எங்க சூப்பர் ஸ்டார் க்குனு எத்தன னு மட்டும் சஸ்பென்ச்னா எம்மாம் பெரிய திரில்... படமும் சீக்கிரம் வந்து தொலைக்கிறது... வந்தாலும் பென்சன் காசுல லோனோ, தீவாளி போனசோ வந்தா தான் டிக்கெட் வாங்கி பாக்க முடியும்...

விடுங்க சார்... நான் கலைஞர்-ட்டயோ இல்ல அம்மாட்டயோ கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ... எப்படியும் மொத 'சோ' அவங்களுக்கு தானே.. பாவம் முதலமைச்சரா இருந்ததுக்கும், இருக்கிறதுக்கும் எங்களால தான் தண்டனை தர முடியாது .... அந்த விஷயத்துல நீங்க பெரிய ஆளுங்க. ஓட்டும் போட்டும் 'படத்த பாரு' னு குட்டும் வைப்பீங்க...

ரஜினி சாரோட ஈ மெயில் அட்ரச்ஸ் ஆவது கொடுங்க சார்... நான் அவர்ட்ட்யாவது கேட்டுக்கிறேன்... அவரு உங்கள மாதிரி பிகு பண்ண மாட்டாரு ...

நீங்களாவது சொல்லுங்க ?
என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு ?

ஆப்பு ஆறுமுகம் கேள்வி :

ரீ மேக்குக்கே இந்த அலும்பா ??? நீங்க எல்லாம் சொந்தமா கத 'பண்ணுனின்கனா ??

(குங்குமம் மார்ச் ௨0)


Friday, March 7, 2008

சுப்புரமனிய சாமி போல் சோ...

ரஜினியோட தன்வரலாறு நூல் வெளியீட்டு விழாவில சோ பேசு னாராம் .. அதுக்கு நம்ம கமெண்ட் இங்க...
(http://satrumun.com/localnews/?p=82)

//‘ஊழலற்ற தலைமைக்கு ரஜினிகாந்த் & நரேந்திர மோடி போல் ரஜினி’: சோ//

நகைச்சுவையான அரசியல் பேச்சுக்கு சோ & சுப்புரமனிய சாமி போல் சோ

//டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய நடிகர் ரஜினிகாந்தின் ஆங்கில சுயசரிதை ‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.//

நன்றி. நன்றி. மிக்க நன்றி. நம்ம விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு தமிழே தக்கு முக்கு. இதில இனி இங்கிலீஸ் புக்... அவுங்க இத படிக்காம இருக்குறது தான் அவனுங்களுக்கு நல்லது 'நறுக்குன்னு' புரிய வச்சதுக்கு நன்றி .

// பத்திரிகையாளர் சோ புத்தகத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். //

அப்பாடா .. நான் கூட அம்மா அஞ்சற பெட்டில ஒழிச்சு வச்சிருக்க காசு, பாட்டி வெத்தல பாக்கு போட வச்சிருந்த காசு... சாரி சாரி .... இப்ப அதெல்லாம் உங்க படம் ஓடுற தேட்டர்ல போண்டா வாங்க கூட பத்தாது.... இஞ்சினீரிங் கல்லேசு பீஸ் கட்ட வச்சிருந்த காச ஆட்டைய போட்டு படம் பார்த்து உங்கள கோடிச்வரனக்கிய ரசிக பெருமக்களுக்கு ஏதோ மரியாத செஞ்சுட்டீங்கலோனு பயந்து போயிட்டேன் ...

// ரஜினியைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்தவரை ரஜினியின் நண்பர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருடன் பல ஆண்டுகள் பழகியிருந்தாலும் அவரை கணிப்பது மிகவும் சிரமமான விஷயம். //

ரஜினி முதலமைச்சரா இருக்குற அரசபைல நீங்க சபா நாயகர் ஆகனும்னா இது மாதிரி எல்லாம் சொல்லி தான் ஆகணும்.


// அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கையில் நடிகர் இல்லை. அவர் அரசியல் பேசுவார்; ஆனால் அவர் அரசியல்வாதி இல்லை. ஆன்மிகத்தைப் பற்றி மிக ஆழமாகப் பேசுவார். ஆனால் அவர் சாமியாரோ, குருவோ அல்ல.//

ஒ .. உங்க மாதிரி தானா

// அவர் மனதுக்கு ஒரு விஷயம் சரி என்று பட்டால் அதைத் தைரியமாகச் செய்வார்.
ஏதோ என்னுடைய அறிவுரையைக் கேட்டுத்தான் ரஜினி நடக்கிறார் என்று பத்திரிகைகளில்தான் செய்தி வருகிறது. ஆனால் நான் கூறிய எதையும் ரஜினி கேட்டதேயில்லை. //

அந்த மாதிரி செய்தி உங்க பத்திரிகைல தான்னு அவருக்கு தெரியுமா??

ரஜினிகாந்த் ஒரு படத்தைத் தொடங்கும்போது கதை, திரைக்கதை, உடன் நடிப்பவர்கள் என பல விஷயங்களைப் பல கோணங்களில் யோசிப்பார். பலர் சொல்லும் கருத்துகளைக் கேட்டுக்கொள்வார். ஆனால் இறுதி முடிவு அவருடையதாகத்தான் இருக்கும்.

// ஏன்னா இப்ப எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருதான தயாரிப்பாளர் ... அவரு சேவிங் பண்றதா மூணு மணி நேர படமா போட்டாலே, போட்ட காசு ஆயிரம் மடங்கா வருதுனா, மத்தவன் பேச்செல்லாம் மதிப்போமா.. //


//ரஜினியை போல்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும். பலருடைய கருத்துகளைக் கேட்டாலும் இறுதியாக முடிவெடுப்பவர் அவர்தான். ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தை குஜராத்தை விட ஒரு படி மேலாகக் கொண்டு சென்றுவிடுவார். அந்த அளவுக்குச் சிறந்த நிர்வாகி. //

பத்தாயிரம் பேரு வேலைபக்குற கம்பென்னிய வருசா வருஷம் ஐந்நூறு சதவீதம் லாபம் வர மாதிரி நிர்வாகிக்கிராரா... இல்ல சூறை விடுறதுக்கு கலர் பேப்பர் கட் பண்ணி தாரா ??

//அதோடு அவருக்கு மக்களின் மீது இருக்கும் அக்கறையும் ஒரு காரணம்.//

இதுக்கு நான் எதுவுமே சொல்ல முடியாதுங்க. எல்லாம் கேள்விபட்டேன்... அவர் ஏரியா மக்கள் தண்ணிக்கு ரெம்ப கச்டபடுறாங்க - நாலு மணி நேரம் வெயில நின்னு குழாய்ல தண்ணி பிடிக்கிராங்கனு கலைக்டேர் ட்ட மனு கொடுக்க போனாருன்னு ... மொத வேலையா அவர வரிசைல நின்னு ஒட்டு போட கத்துக்க சொல்லுங்க...

அதற்காக ரஜினி அரசியலுக்கு வருவார் என என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காயத்ரி அதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பற்றி கூறுகையில்… ‘ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார்’ என்று அவர் கூறியதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்தேன்.
இன்னொரு விஷயம்… இதை வேறு எங்கும் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சிலர் அரசியலுக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால் ஒரு மனிதரை அரசியலுக்கு வாருங்கள் என்று மக்கள் தாங்களாகவே அழைப்பதை இங்குதான் காண முடியும்.

நான் அப்பவே சொன்னேன், அவரு மாட்டாருடா... அவரோட கல்யாண மஹால் அரசாங்கம் போடுற ரோட்டுக்கு இடைஞ்சலா இல்லடா... தலைவர் தெளிவானவரு... எல்லாரும் எஞ்சிநீரிங் காலேஜ் கட்டி கோடி கோடியா சம்பாரிக்கிரப்ப, அத தலைவரு நர்சரி ஸ்கூல் கட்டியே சம்பரிக்கிரவரு ...அத கேக்காம இந்த பன்னாடைங்க இன்னும் போஸ்டர் ஒட்டுரனுங்க...டேய் சீக்கிரம் நிப்பாட்டுங்கட... இல்ல தெலுங்கு மலையாளத்துல எல்லாம் இந்த மாதிரி புக்கு ரிலீசாகும் ...

// ஆரம்பத்தில் அவருடைய ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அடித்தள, நடுத்தர வர்க்கத்தினரும் அழைத்தார்கள். //

யோவ்.. நல்ல பாருயா.. எல்லாம் அதே பசங்க தான்யா... அவுங்க எல்லாம் மேல் தட்டுல இருந்து - உங்க சிவாஜி படம் டிக்கட் வாங்கின பின்னாடி அடித்தள நடுத்தெரு வர்க்கமா மாறுனவுங்க ..

//ரஜினியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை; //

நல்ல விஷயம் தான்.. ஆனா அவரது ரசிகர்களுக்கு தான் அவுங்க வீட்டு பசங்கள நீங்களோ இல்ல உங்க மனைவியோ நடத்துற பள்ளி கூடத்துல சேர்த்து படிக்க வைக்கணும்னு எதிர்பர்ர்ப்பு இருக்கு.

// எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்ற எண்ணமும் இருந்ததில்லை. ‘சிவாஜி’ படத்தின் வெற்றிக்குக் கூட ஷங்கர், ஏவிஎம் சரவணன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள்தான் காரணம் என அவர்களைத்தான் புகழ்ந்தார். //

நான் கூட கலைஞரோட காரண கரிசனமும், நீங்க ஆணை இட்டால் கங்கையையும் காவிரியையும் இணைக்க துடிக்கும் உங்க ரசிக பட்டாளம்னு நெனச்சேன்.

// சிறிய அளவு பணம், புகழ் சேர்ந்தாலே ஒருவரைப் பிடிக்க முடியாது. தலைக்கணம் ஏறிவிடும். ஆனால் ரஜினிக்கு பெரும் புகழ், பணம் இருந்தும் இன்னும் தலைக்கணம் வராமல் இருப்பதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தன்மையே. //

ஆமா அவரு வருசா வருஷம் பிறந்த நாளைக்கு ரசிகர்ல பார்த்து கொஞ்சி குலவுரறு..

//அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற தலைமை உறுதியாக அமையும். //

அப்படியே வறுமை, வேலை இல்ல திண்டாட்டம் எல்லாம் ஒழியனும்னா சிம்ரனையும் ஜோதிகாவையும் முதலமைச்சர் ஆக்கனும்னு UN, உலக வங்கி கொடுத்திருக்கிற report-அயும் வாசிசுடுங்க ..

//மற்றபடி இந்தப் புத்தகத்துக்கு என்னிடம் இருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை. அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் உரிய மரியாதை செய்துவிட்டார்கள் என்றார் சோ.
விழாவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் //அவரோட வீட்டுக்கு சி பி ஐ வருமான வரி சோதனைக்கு - சும்மானாச்சுக்கும் - போயிருந்தா கூட எம்புட்டு நேர்மைய நடந்திருக்கும்னு இப்ப தெரியுது..


//‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தகத்தில் ரஜினிகாந்த் பற்றிய பல விஷயங்கள் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டுள்ளன என புகழாரம் சூட்டினர்.////

எங்க அப்பன் குதிருக்குல இல்லைன்னு சொல்லுறேன்... அப்புறம் என்னடா

//இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விஜயகுமார், ஷோபா சந்திரசேகர், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். //


பின் குறிப்பு: இந்த புத்தகத்தை தெரிந்தோ தெரியாமலோ வாங்கி படித்தோ படிக்கமலோ வைத்திருப்பவர்கள் - முடிந்தால் ஒரு ரெவியு எழுதவும் .

Thursday, March 6, 2008

சுஜாதா சார் ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்லேட்...!

யப்பா சாமி.... இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா சாமி...
சுஜாதா சார் செத்து ரெம்ப நாள் ஆயபோசுடா... ரெண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியே கிட்டக்க வந்துடுச்சு ... இவனுங்க இன்னும் இரங்கல் கூட்டம் நடத்திட்டு இருக்கனுங்க..
ரெம்ப பேரு திருப்பி திருப்பி எழுதுறீங்க... பின்னோட்டம் போடுறீங்க...அதனால இந்த மேட்டர் தான் திருப்பி திருப்பி தமிழ்மணம் காட்டுது ...
உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் தரேன்.

1. சுஜாதா சாரை நான் _____________ பார்த்து உரையாடிய போது அவர் எளிமையும் அறிவையும் ஒரு சேர தாங்கி பிடித்திருப்பது தெரிய வந்தது
( ஏரோ பிளனில், வாசிங்க்டன் சாப்பிங் சென்டரில், மெரினா பீச்சில், டாய்லெட் டில்)

2. அவர் தமிழ் எழுத்துலகின் _____________________
( சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜேம்ஸ் ஹர்ட்லே செஸ் , போரிஸ் பேக்கர், மைக் டைசன் ..)

3. அவரது எழுத்துக்களை நான் __________________ முதலே படித்து வருகிறேன்
( எட்டாம் வகுப்பு மூன்றாம் முறையாக படித்த காலத்திலேயே, பல்வாடியில் சேர்ந்த பொழுது, கல் தோன்றி முன் தோன்ற காலத்தே )

4. அவர் ஒரு __________________
(சகல கலா வல்லவன், எழுத்தையும் தாண்டி நின்றவர், எழுத்துக்கு முன்னடி நின்றவர் , டென்னிஸ் விளையாட்டு வீரரும் கூட, )

5. எனக்கு ___________ ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம்
( கணினி மீது, கல்குலட்டேர் மீது, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு பிரேமா மேல் , யாஹூ சாட்டில் )

6. அவரது எழுத்துகளை எனக்கு மிகவும் பிடித்தது _________________
( கற்க கசடற, என் இனிய சந்திரா, கொச்சை கயிறு, பிரிப்போம் சந்தி சிரிப்போம், க-நாவில் அவர் புள்ளி வைத்து அதை க்க்-கனாவாக மாற்றும் அழகு )

7. கதை எழுதுவதில் மட்டும் அல்ல, அவர் ___________ மிக திறமையானவர்.
( கவிதை எழுதுவதிலும் , கைவித்தையிலும் , நாடகம் எழுதுவதிலும் , நகம் கடிப்பதிலும், தம்பிராஸ் மாநாட்டில் பேருரை ஆற்றுவதிலும் )

8. சுஜாதா அவர்களின் அருமையான படைப்புக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் ________________ இருந்தன என்பது குறிப்பிட தக்கது .

( அவரது அலுவலகத்துக்கு கீழ் இருந்த பெரிய ஆங்கில புத்தக கடை, BSNL லோ BEL லோ கொடுத்த OC இன்டர்நெட் கனக்சன், அவருக்கு வாசகர்கள் அனுப்பிய கேள்வி கணைகள் )

9. அவரது கதைகளை வார இதழ்களில் படிக்கும் போது நான் ஒவ்வொரு வாரமும் மிகவும் ஆவலுடன் தேடுவது ___________
(வசந்த் பேசும் வரிகள், அரஸ் அவர்கள் வரைந்த கவர்ச்சி படங்கள், 'முற்றும்'.)

10. அவரது ___________ தமிழகத்திற்கு பெரும் துன்பம்
( இறப்பு, பிறப்பு, சினிமா வசனங்கள்...)

சீக்கிரம் பில் அப் பண்ணி எல்லாரும் இன்னிக்கு நைட்டுக்குல பதிவு போட்டுரங்க.
நாளைல இருந்து நம்ம வழக்கமான மொக்கைக்கு போய்டலாம்..

Wednesday, March 5, 2008

என் ப்ரோபைல் பத்தி :

என் ப்ரோபைல் பத்தி :

என்னடா இந்த ப்ரோபைல பய்யன பொண்ணா னு தெளிவா போடலியே.. பொண்ண இருந்தா ஒரு பின்னூட்டம் விட்டு பின்னோட்டம் விடலாம்... பய்யன இருந்தா ஆல்ட் எப் போற அழுத்தலாம் னு தான நினக்கிறேங்க ...

இந்த ப்ரோ பைல் கீழே sex க்கு பக்கத்துல "ஆமா நெறைய தேவை. " னு தான் எழுத ஆசை. ஆனா இந்த பரதேசி பசங்க புல் டவுன் மெனுவ வச்சு - அதுவும் ரெண்டே சாஇசு கொடுத்து கெடுத்து புட்டானுங்க.

இந்த பொண்ணு படம் எனக்கு புடிசிருக்குங்க ... ஏன்னா பாருங்க அது என்னோட செல்ல பேர பச்ச குத்தி இருக்கு. நமக்கு இதானுங்க பெரிய தொல்லை.. எங்க போனாலும் பொண்ணுங்க ...ச்சே,..என்ட அப்படி என்ன தான் இருக்கோ... வீக் எண்டு வந்தாலே பயமா இருக்குங்க.. எவ எங்க கூபிடுராலோனு ....

ரெம்ப பேசுவேன் - தண்ணி அடிச்சா;
கொஞ்சமா எழுதுவேன் - டி வி ரிமோட் கண்ட்ரோல் பாட்டரி தீர்ந்து போச்சுனா;
கடிக்குரவன கொதருவேன் - என் மணி பர்ச கடிக்குரவன;
பிட்சை எடுத்தாவது குவார்டரோ, கட்டிங் குவர்டரோ அடிப்பேன். - மனைவி ஊருக்கு போன பின்னாடி ... நீங்க ?

பெயர் காரணம்:

பெயர் காரணம்:

ரெம்ப பேரு, எனக்கு ஏன் மண்வெட்டியானு எங்க அய்யா பேரு வசிருக்காருனு நான் எங்க போனாலும் கேக்குரனுங்க... அது ஏன்-னு எங்க அய்யா கிட்ட நான் கேட்டதே இல்ல.. நான் என் அய்யா கிட்ட வார்த்தைல எல்ல்லாம் பேசுறது இல்ல... நம்பர்ஸ் ஒன்லி.. புரிளியா ?
"அய்யா, ஒரு 200 கொடு , புக்க ஜெராக்ஸ் எடுக்கணும்" "47 ரூவா 50 காசு கொடு பெட்ரோல் போடணும் ". இப்படி தான். நாங்க வேற எதுவும் பேசினா அடி தடில தான் முடியும்.. "டேய் நீ நேத்து காலேஜுக்கு போகல போல... தங்க ரீகல்-ல உண்ண பார்த்த தங்க ராசு சொன்னானே ". அம்புட்டு தான்... தங்க ராசு செத்தான். சும்மாவா , அவன் என்னைய விட 8 வயசு சின்ன பய்யன். அடி வெளுத்து புட மாட்டேன் ...

நான யோசிச்சு பார்த்தேன் :

1. நான் பிறந்த உடனே எங்க ஆத்தாவுக்கு " உன் பய்யன் எதையும் வெட்டி கிழிக்க போறதில்ல னு" மரியத்ததா சாமி வது சொல்லி இருக்கணும்

2. இந்தியா ல இருந்து வர பசங்களுக்கு எல்லாம் 'அமித்' , 'வினய்' 'அகர்வால்' ' ஷர்மா' னு தான் பேர் இருக்கும்னு நெனச்சுகிட்டு இருக்கிற வெள்ள கார பசங்கள பத்தி எங்க அய்யாவுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கணும். என் அய்யா நெனசிருப்பறு, நம்ம பய்யன் வெளி நட்டு பசங்கள அசத்தனும்னு ... இப்ப பாருங்க " ஹாய் டியுட், ஐ யாம் மண்வெட்டியான், ப்றோம் இந்தியா" னு சொன்ன எம்புட்டு சூபெற இருக்கு..

3. எனக்கு இந்த பேரு வச்ச எங்க அய்யாவுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும். எம்புட்டு
பெரிய மனுஷன் பாஸ் போர்ட்ட காம்பிசாலும் உம்ம்னு இருக்குர இந்தியன் இம்மிகிரசன் ஆபிசெர்' என் பேர் பாஸ் போர்ட்ட்ள பற்றது கொஞ்சம் சிரிக்கிறாங்க ....