Saturday, June 14, 2008

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்
பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .
விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !
அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

31 comments:

said...

"தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !"
--

இதைத்தான் கொலைவெறி என்று சொல்லுவாங்க!

Anonymous said...

//அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. //

இநதிய அரசின் தேசிய விருது பெறுவதற்காக இப்படம் பல பிரிவுகளில் போட்டியிடலாம். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று.
ஆனால் இன நல்லிணக்கத்துக்கான விருது (இந்தமுறை 'அரண்' படத்துக்குக் கிடைத்திருக்கிறது) இப்படத்துக்கு நிச்சயம்.

ஸ்ரீனி said...

//படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .//

கலக்கிட்டீங்க..

//எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.//

சரியாச் சொன்னீங்க..கமல் பத்து வேஷம் போடறதுக்காக பின்னப்பட்ட கதை( அப்டின்னு ஒண்ணு படத்துல இருந்தா ) மாதிரிதான் தோன்றுகிறது..

Anonymous said...

//படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது //

Good catch!!! :-)


ராம்கி

said...

/இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... /

/படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது/

/பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !! /

((-

Sangu said...

அப்ப உண்மையாவே அந்த கொரங்கு கமல் இல்லையா ????

vijay said...

நண்பா எனக்கு ஒரு முக்கியமான டவுட் ....கமல் இந்த படத்துல எப்டி மௌத் கிஸ் அடிச்சார்னு நீங்க சொல்லவே இல்ல?? .....இன்னொரு காரக்டர்ல அவரே ஹெரோஇனா வந்து கிஸ் அடிட்சுகிட்டாரா......

said...

உண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா ?
நண்பர்களின் வருகைக்கும், கருத்துக்கும், பின்நூட்டதிர்க்கும் நன்றி .
தசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும் !!
மொத்தம் முப்பது யூரோ செலவு - டிக்கட் இருவது யுரோவாம் .
ச்சே வெள்ளி கிழமை என்னோட 'ரெட் லேபல்' பட்ஜெட்ல இந்த வாரம் துண்டு .

//அப்ப உண்மையாவே அந்த கொரங்கு கமல் இல்லையா ????//

நமக்கு அந்த படத்துல யாரெல்லாம் கமல்ல்னு ஒரு சிலைடு ஷோ போடுறாங்கப்பா - நம்ம பாட்டுக்கு அசின், மல்லிகா எல்லாமே கமலோட மேக்கப்னு நேநேசுட கூடாதுன்னு ...அந்த சிலைடு ஷோவ்ள - பட்டுள்ள - நான் கவானித்த வரை அந்த குரங்கு இல்லை .

said...

\\நண்பா எனக்கு ஒரு முக்கியமான டவுட் ....கமல் இந்த படத்துல எப்டி மௌத் கிஸ் அடிச்சார்னு நீங்க சொல்லவே இல்ல?? .....இன்னொரு காரக்டர்ல அவரே ஹெரோஇனா வந்து கிஸ் அடிட்சுகிட்டாரா......\\

இந்த படத்துல கமல் அசின 'ஆன் த மூவ்லேயே' பிக்கப் பன்னுராரா.... அதனால அவருக்கு நேரமில்லை ..அப்புறம் உலகத்த அழிக்க போகின்ற கிருமிய கைப்பற்றுறது முக்கியமா, அசின்னு முக்கியமானு வந்த கேள்வியில, உலகத்த காப்பாத்தி நம்மள கொண்டுருராறு ...இதான் கதைப்பா.

said...

It is certainly not as bad as you say. There are Hollywood movies where people fly in luggage section. (Flight Plan).

Kamal doing 10 roles is the theme of the movie so there is no question of 'can't others do the role?' The story, screenplay is used just as a platform for Kamal to do the 10 roles so just get past the few glitches... this is not a major story to be analyzed..

But I feel a reaction as yours could be easily evoked by the film.

I was for the most part not so impressed. You could deduct it from my post. If you paid as much attention to it as to the movie. :)

said...
This comment has been removed by the author.
said...

சிறில்,

flight plan க்கு விமர்ச்சனம் எழுதினாலும் இப்பிடி தான் எழுதுவோம். நிற்க.

இப்படி சோதா கதையும் சாதா சதை மேட்டரையும் வச்சிக்கிட்டு 'முதலமைச்சரை கூட்டியாந்து ' படத்த காட்டுறது, அவரு புகழ்ந்து பேசுறது, சாக்கி சான கூட்டி வரது, புஸ்ஸே பாக்கபோராருனு புருடா விடுறது எல்லாம் எதுக்கு ???
அம்புட்டு பேரையும் தேட்டருக்கு வரவச்சு டவுசர அவுத்துட்டு விடுரரதுக்கு ..

அம்புட்டு ஏத்திவிட்டு சில்லரத்தனமா படம் எடுத்தா கடுப்பு வராதா ??

அப்புறம் அவருக்கு எல்லா வேசமும் முடியும், ஒரே படத்துல பத்து ரோல் பன்னமுடியும்னு காம்பிக்கனும்னா, அதுதான் என் நோக்கம்னு தெளிவா சொல்லி டைட்டில் போடட்டும். இந்த நல்லவன் மாதிரி வேஷம் எதுக்கு!!

said...

இந்த படம் ஆளவந்தான் பார்ட் 2 னுல்ல எங்கூர்ல பேசிக்கிறாய்ங்க

ஸ்ரீனி said...

//Kamal doing 10 roles is the theme of the movie so there is no question of 'can't others do the role?' //
அப்போ இத்தனை ரோல் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டு அதுக்கு ஏத்தா மாதிரி கதைன்னு ஏதொ ஒண்ணை அப்பறமா முடிஞ்சா ஒப்பேத்திக்கலாம். அது சரி, ஒழுங்கான கதை வேச்சுட்டுத்தான் படம் எடுக்கணும்னா ரிலீசாகுற தமிழ் படம் எதுவுமே வராது..அதுவும் ஒரிஜினலான (ஓரளவுக்காவது) கதையோட படம் எடுக்கணும்னா கமல் தலையில துண்டைப்போட்டுகிட்டு ஓட வேண்டியதுதான்.. ஏதோ சிவாஜி நவராத்திரில 9 வேஷத்துல நடிச்சதுனால தசாவதாரம் வேற யாரவது 10 வேஷத்துல நடிச்சு இருந்தா இதுவே "ஏகாதசி"யாயிருக்கும்...இதுல பத்து வேஷத்துல நடிச்சது என்னவோ பெரிய சாதனை மாதிரி பேச்சு என்னா.. 10 வேஷம்னு முடிவாயச்சு அது கதைக்கு தேவைப்பட்டு ஒண்ணுமில்லை. பத்துன்னா பத்து இல்லன்னா பதினொன்னு..இன்னுமொரு அடிஷனல் மேக்கப்..இதை பெரிசாக்கி சில பேரு ஆஹ ஓஹோன்னிருக்கர விமர்சனத்தையெல்லாம் பாத்தா என்ன சொல்றது...எல்லாம் தமிழ்னோட தலையெழுத்து ( அப்படியும் சொல்ல முடியாது, இந்த லட்சணத்துல இதை 4 மொழியில வேற ரிலீசாம். )...கொடுமைடா சாமி!!

said...

//அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .//


செம செம செம!

இன்னொரு பதிவுல யாரோ 547 கமலை எண்ணினாங்களாம்!
:)0
கேலிக்கூத்து.

சிரில் சொல்வது போல கமல் 10 அவதாரம் எடுக்கணும்னு நினைச்சார்னா, அதுக்குத் தகுந்த கதை பண்ணி இருக்கணும்.

நவராத்திரி மாதிரி.

அது வந்து 25 வருஷம் ஆகுது.

நம்ம கற்பனை என்ன வறண்டா போயிடுச்சு?

Anonymous said...

1. அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..

ramaselvi said...

தசாவதாரம் விமர்சனம் மிகவும் உண்மை. ஆனால் கமல் இப்படி படத்தை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று பதில் சொன்னால் அவர்களின் பார்வை புரியும், ஆனால் கமல் சொல்வாரா தெரியவில்லை, ஒரு அன்பே சிவம் தந்த கமலால் இந்த படத்தை எப்படி தரமான படம் என்று சொல்லமுடிகிறது. ஷங்கர் ஒருவர் போதும் தொழில்நுட்பம் என்ற பெயரில் குப்பைகளை கொடுக்க. என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

said...

ஐய்யய்யோ குருவி பார்ட் 1 பாக்காம பார்ட் 2 பாத்துட்டேன் அதனாலதான் படம் நல்லா இல்லியோ!?!?!?

said...

இது தான் உண்மையான விமர்சனம். நான் படத்தை dvd ல பாத்துக்கிறேன்.

இல்லைனா இந்திய தொலைகாட்சிகளின் முதன் முறையாக பார்த்துக்கிறேன்

said...

அப்பு, நல்லா சொன்னீங்கப்பு!! நான் படம் பார்த்த கூத்தை ஒரு பதிவாத்தான் போடனும்.

குரங்கு டச் சூப்பர்!

said...

//படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .//

Good Joke. Ha Ha Ha.

said...

அனைத்து நண்பர்களின் வருகைக்கும், பின்நூட்டதிர்க்கும் நன்றி

அட நீங்க வேற, அந்த குரங்கு 'மூன்றாம் பிறை' ரேஞ்சுக்கு வேற ஆக்ட் பண்ணுது - சாக்லேட் வேணும்னு அடம் புடிக்க ...அந்த பாப்பா கேட்டதுல தப்பே இல்ல

Anonymous said...

did u really watch the movie? or giving comments so that everyone will come and visit ur blog???

said...

உங்களுக்கு விஜய் படமா, இல்ல கமல் பட விம்ரச்சனம் தானா னு சந்தேகம் வந்துடுச்சா ???
உச்ச கட்ட காமடி ஒன்னு இருக்கு. சர்தார் கமலுக்கு தொண்டைல புற்று நோய் வந்திடும். அத ஆபரேசன் பண்ணினா, குரல் போய்டும் ஆனா உயிர் பிழைக்க வழி இருக்குன்னு சொல்லிடுவாங்க. வில்லன் கமல் சண்டைல துப்பக்கியாள சுடுரப்ப, குறி தவறி சர்தார் கமலோட தொண்டைல குண்டு தொலைச்சிடும். இந்த குண்டு புற்று நோய் செல்ல்கள அழிச்சிடுச்சாம்; குரலுக்கும் ஒண்ணும் ஆகலியாம்...

Anonymous said...

Neer rajini rasigaro???

said...

நான் ரசினி ரசிகரா ???
இந்த பதிவ பார்த்துட்டு சொல்லவும்... இன்னும் என்னோட ப்ளாக் லா சில பதிவு இருக்கு...http://manvettiyan.blogspot.com/2008/04/tbcd.html

rajini fan likes Kamal after Dasavathaaram said...

Hi,
Dasavathaaram is a nice movie. No doubt. I suspect people who writes in this blog has no proper knowledge about films.

ungala ellam paartha enakku paavama irrukku... Nee enna eluthinaalum intha padam kandippa nalla odum. mothalla intha vaitherichal paduratha niruthu ma kannu..

said...

//rajini fan likes Kamal after Dasavathaaram//

அடேங்கப்பா .... இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புடிச்சா என்ன புடிக்காட்டீ என்ன !!!

//has no proper knowledge about films.//

சரிதாம்ப்பா .... இந்த படத்துல இருக்க நாலட்ஜ வச்சு நல்ல வாழுங்க !!!
நாங்க அழுதுட்டு போறோம் ...

sathishbabu said...

sir,

ongal madiri alugalala than, taminade urupudama poguthu.unudaya karuthuku ethir karutha post pannama irukathailyae un latchanam theriyuthu.

nee matru karytha varverkirvan illa.onnala pesi jeika mudiyathu athanathan intha oneway mediaya va nee select panni iruka.

Thambi arivu valaranum na argue pannanum adamenta iruka kodathu..

nee inuum valaranum thambi...

said...

//எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது//
அப்போ அது கமல் கிடையாதான்னு பின்னூட்டம் போட நினைச்சேன்.. அதுக்குள்ள சங்கு ஊதியாச்சு..
ஸோ சங்குக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்

said...

"amma, indha kurangum kamalamaa?" - aha, sariyana madurai nakkal machchan!