Friday, March 7, 2008

சுப்புரமனிய சாமி போல் சோ...

ரஜினியோட தன்வரலாறு நூல் வெளியீட்டு விழாவில சோ பேசு னாராம் .. அதுக்கு நம்ம கமெண்ட் இங்க...
(http://satrumun.com/localnews/?p=82)

//‘ஊழலற்ற தலைமைக்கு ரஜினிகாந்த் & நரேந்திர மோடி போல் ரஜினி’: சோ//

நகைச்சுவையான அரசியல் பேச்சுக்கு சோ & சுப்புரமனிய சாமி போல் சோ

//டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய நடிகர் ரஜினிகாந்தின் ஆங்கில சுயசரிதை ‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.//

நன்றி. நன்றி. மிக்க நன்றி. நம்ம விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு தமிழே தக்கு முக்கு. இதில இனி இங்கிலீஸ் புக்... அவுங்க இத படிக்காம இருக்குறது தான் அவனுங்களுக்கு நல்லது 'நறுக்குன்னு' புரிய வச்சதுக்கு நன்றி .

// பத்திரிகையாளர் சோ புத்தகத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். //

அப்பாடா .. நான் கூட அம்மா அஞ்சற பெட்டில ஒழிச்சு வச்சிருக்க காசு, பாட்டி வெத்தல பாக்கு போட வச்சிருந்த காசு... சாரி சாரி .... இப்ப அதெல்லாம் உங்க படம் ஓடுற தேட்டர்ல போண்டா வாங்க கூட பத்தாது.... இஞ்சினீரிங் கல்லேசு பீஸ் கட்ட வச்சிருந்த காச ஆட்டைய போட்டு படம் பார்த்து உங்கள கோடிச்வரனக்கிய ரசிக பெருமக்களுக்கு ஏதோ மரியாத செஞ்சுட்டீங்கலோனு பயந்து போயிட்டேன் ...

// ரஜினியைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்தவரை ரஜினியின் நண்பர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருடன் பல ஆண்டுகள் பழகியிருந்தாலும் அவரை கணிப்பது மிகவும் சிரமமான விஷயம். //

ரஜினி முதலமைச்சரா இருக்குற அரசபைல நீங்க சபா நாயகர் ஆகனும்னா இது மாதிரி எல்லாம் சொல்லி தான் ஆகணும்.


// அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கையில் நடிகர் இல்லை. அவர் அரசியல் பேசுவார்; ஆனால் அவர் அரசியல்வாதி இல்லை. ஆன்மிகத்தைப் பற்றி மிக ஆழமாகப் பேசுவார். ஆனால் அவர் சாமியாரோ, குருவோ அல்ல.//

ஒ .. உங்க மாதிரி தானா

// அவர் மனதுக்கு ஒரு விஷயம் சரி என்று பட்டால் அதைத் தைரியமாகச் செய்வார்.
ஏதோ என்னுடைய அறிவுரையைக் கேட்டுத்தான் ரஜினி நடக்கிறார் என்று பத்திரிகைகளில்தான் செய்தி வருகிறது. ஆனால் நான் கூறிய எதையும் ரஜினி கேட்டதேயில்லை. //

அந்த மாதிரி செய்தி உங்க பத்திரிகைல தான்னு அவருக்கு தெரியுமா??

ரஜினிகாந்த் ஒரு படத்தைத் தொடங்கும்போது கதை, திரைக்கதை, உடன் நடிப்பவர்கள் என பல விஷயங்களைப் பல கோணங்களில் யோசிப்பார். பலர் சொல்லும் கருத்துகளைக் கேட்டுக்கொள்வார். ஆனால் இறுதி முடிவு அவருடையதாகத்தான் இருக்கும்.

// ஏன்னா இப்ப எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருதான தயாரிப்பாளர் ... அவரு சேவிங் பண்றதா மூணு மணி நேர படமா போட்டாலே, போட்ட காசு ஆயிரம் மடங்கா வருதுனா, மத்தவன் பேச்செல்லாம் மதிப்போமா.. //


//ரஜினியை போல்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும். பலருடைய கருத்துகளைக் கேட்டாலும் இறுதியாக முடிவெடுப்பவர் அவர்தான். ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தை குஜராத்தை விட ஒரு படி மேலாகக் கொண்டு சென்றுவிடுவார். அந்த அளவுக்குச் சிறந்த நிர்வாகி. //

பத்தாயிரம் பேரு வேலைபக்குற கம்பென்னிய வருசா வருஷம் ஐந்நூறு சதவீதம் லாபம் வர மாதிரி நிர்வாகிக்கிராரா... இல்ல சூறை விடுறதுக்கு கலர் பேப்பர் கட் பண்ணி தாரா ??

//அதோடு அவருக்கு மக்களின் மீது இருக்கும் அக்கறையும் ஒரு காரணம்.//

இதுக்கு நான் எதுவுமே சொல்ல முடியாதுங்க. எல்லாம் கேள்விபட்டேன்... அவர் ஏரியா மக்கள் தண்ணிக்கு ரெம்ப கச்டபடுறாங்க - நாலு மணி நேரம் வெயில நின்னு குழாய்ல தண்ணி பிடிக்கிராங்கனு கலைக்டேர் ட்ட மனு கொடுக்க போனாருன்னு ... மொத வேலையா அவர வரிசைல நின்னு ஒட்டு போட கத்துக்க சொல்லுங்க...

அதற்காக ரஜினி அரசியலுக்கு வருவார் என என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காயத்ரி அதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பற்றி கூறுகையில்… ‘ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார்’ என்று அவர் கூறியதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்தேன்.
இன்னொரு விஷயம்… இதை வேறு எங்கும் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சிலர் அரசியலுக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால் ஒரு மனிதரை அரசியலுக்கு வாருங்கள் என்று மக்கள் தாங்களாகவே அழைப்பதை இங்குதான் காண முடியும்.

நான் அப்பவே சொன்னேன், அவரு மாட்டாருடா... அவரோட கல்யாண மஹால் அரசாங்கம் போடுற ரோட்டுக்கு இடைஞ்சலா இல்லடா... தலைவர் தெளிவானவரு... எல்லாரும் எஞ்சிநீரிங் காலேஜ் கட்டி கோடி கோடியா சம்பாரிக்கிரப்ப, அத தலைவரு நர்சரி ஸ்கூல் கட்டியே சம்பரிக்கிரவரு ...அத கேக்காம இந்த பன்னாடைங்க இன்னும் போஸ்டர் ஒட்டுரனுங்க...டேய் சீக்கிரம் நிப்பாட்டுங்கட... இல்ல தெலுங்கு மலையாளத்துல எல்லாம் இந்த மாதிரி புக்கு ரிலீசாகும் ...

// ஆரம்பத்தில் அவருடைய ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அடித்தள, நடுத்தர வர்க்கத்தினரும் அழைத்தார்கள். //

யோவ்.. நல்ல பாருயா.. எல்லாம் அதே பசங்க தான்யா... அவுங்க எல்லாம் மேல் தட்டுல இருந்து - உங்க சிவாஜி படம் டிக்கட் வாங்கின பின்னாடி அடித்தள நடுத்தெரு வர்க்கமா மாறுனவுங்க ..

//ரஜினியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை; //

நல்ல விஷயம் தான்.. ஆனா அவரது ரசிகர்களுக்கு தான் அவுங்க வீட்டு பசங்கள நீங்களோ இல்ல உங்க மனைவியோ நடத்துற பள்ளி கூடத்துல சேர்த்து படிக்க வைக்கணும்னு எதிர்பர்ர்ப்பு இருக்கு.

// எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்ற எண்ணமும் இருந்ததில்லை. ‘சிவாஜி’ படத்தின் வெற்றிக்குக் கூட ஷங்கர், ஏவிஎம் சரவணன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள்தான் காரணம் என அவர்களைத்தான் புகழ்ந்தார். //

நான் கூட கலைஞரோட காரண கரிசனமும், நீங்க ஆணை இட்டால் கங்கையையும் காவிரியையும் இணைக்க துடிக்கும் உங்க ரசிக பட்டாளம்னு நெனச்சேன்.

// சிறிய அளவு பணம், புகழ் சேர்ந்தாலே ஒருவரைப் பிடிக்க முடியாது. தலைக்கணம் ஏறிவிடும். ஆனால் ரஜினிக்கு பெரும் புகழ், பணம் இருந்தும் இன்னும் தலைக்கணம் வராமல் இருப்பதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தன்மையே. //

ஆமா அவரு வருசா வருஷம் பிறந்த நாளைக்கு ரசிகர்ல பார்த்து கொஞ்சி குலவுரறு..

//அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற தலைமை உறுதியாக அமையும். //

அப்படியே வறுமை, வேலை இல்ல திண்டாட்டம் எல்லாம் ஒழியனும்னா சிம்ரனையும் ஜோதிகாவையும் முதலமைச்சர் ஆக்கனும்னு UN, உலக வங்கி கொடுத்திருக்கிற report-அயும் வாசிசுடுங்க ..

//மற்றபடி இந்தப் புத்தகத்துக்கு என்னிடம் இருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை. அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் உரிய மரியாதை செய்துவிட்டார்கள் என்றார் சோ.
விழாவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் //



அவரோட வீட்டுக்கு சி பி ஐ வருமான வரி சோதனைக்கு - சும்மானாச்சுக்கும் - போயிருந்தா கூட எம்புட்டு நேர்மைய நடந்திருக்கும்னு இப்ப தெரியுது..


//‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தகத்தில் ரஜினிகாந்த் பற்றிய பல விஷயங்கள் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டுள்ளன என புகழாரம் சூட்டினர்.////

எங்க அப்பன் குதிருக்குல இல்லைன்னு சொல்லுறேன்... அப்புறம் என்னடா

//இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விஜயகுமார், ஷோபா சந்திரசேகர், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். //


பின் குறிப்பு: இந்த புத்தகத்தை தெரிந்தோ தெரியாமலோ வாங்கி படித்தோ படிக்கமலோ வைத்திருப்பவர்கள் - முடிந்தால் ஒரு ரெவியு எழுதவும் .

6 comments:

said...

தமிழ்மணத்து புது வரவா? வாங்க வெட்டியாரே வாங்க. நல்லா கொத்திப் போட்டு நாற்று நடுங்க.

இந்த பதிவின் தலைப்பில் உள்ள சுப்புரமனியவுக்கு மூனு சுழி ண. மாத்திக்கோங்க. :-)

உங்க காமெண்ட் எல்லாம் சூப்பர் தான். நெறையா சூப்பரின் ரசிகர்கல் இருக்கும் இடத்துல இப்படியெல்லாம் காமெண்ட் அடிச்சிருக்கீங்க. அடிகிடி வாங்காம தம் பிடிச்சி தப்பிக்க பாருங்க.

said...

கலக்கல் பதிவு.. ரொம்ப நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து கலக்குங்க..

Anonymous said...

Dear மன்வெட்டியான்
சோ அடிக்கற காமெடிய கேட்டதும் எனக்கு ஒரு டவுட்...
முடியில தான் மூல இருக்கோ!!

said...

அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..

said...

//1. அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட ராசா..
2. சூப்பர் மாமு... கலக்கல்
3. நல்ல ட்ரை ..
4. விண்டோஸ் 98 ஆ இருந்தா டாக்டர் வாட்சன் வந்திருப்பார்
5. டேங்கோத்தா... எங்கடா டெலிட் பட்டன் இருக்கு ?//

சூப்பர் மாமு கல்க்கல்னு சொல்ல முடியலை ரிவிட்டு கம்மியா இருக்கு :)) அதனால ரிவிட்டு அதிகமா அடிக்கறவரிக்கும்

டேங்கோத்தா... எங்கடா டெலிட் பட்டன் இருக்கு ?


அப்பாலிக்கா இவுதாண்ட போயி இதையும் பட்ச்சிக்கோ மாமு

http://hawkeyeview.blogspot.com/2008/05/book-review-name-is-rajinikanth.html

அந்த டொக்டரக்கா ரெனவுண்டு ஆப்தால்மாலஜிஸ்டாமாம்...எனுக்கு தெரியாம் பூட்ச்சு...தெரீஞ்சிருந்தா என் அவுஞ்சி போன் கண்ண அவுங்களாண்ட காட்டிருப்பேன்

Anonymous said...

elizabeth coping biased prolonged paulhastings cykd processed infectious ltdpatrick sammelan emed
lolikneri havaqatsu