Friday, January 15, 2010

வித்தியாசமாய் படம் எடுப்பதாக சொல்லுபவர்களுக்கான எச்சரிக்கை !!!

முப்பத்தஞ்சு கோடியோ முந்நூத்தம்பது கோடியோ செலவழிச்சு படம் எடுக்குறீங்க..
மூணு வருசமா ரா பகலா கஷ்டபடுத்தி படம் எடுக்குறீங்க...
துருக்கில இருந்து கொரியா வரைக்கும் போய் டான்ஸ் ஆடி படமேடுக்குறீங்க
கிந்தி, இங்கிலீஸ், ச்பாநீஸ் படம் எல்லாம் நல்ல டி.வி.டி ல பார்த்துபுட்டு முந்தாநேத்து தமிழ்ல வந்த படத்தவே உல்டா பண்ணுறீங்க...

நீங்க மொதல்ல புதுசா பட பேராவது சொந்தமா வைங்க ...

அப்புறம் படம் எடுத்து கிழிங்க !!

இப்படிக்கு,
ஆயரத்தில் தொள்ளயிரத்து எண்பத்து அஞ்சு பேரு .

Tuesday, May 12, 2009

அழகிரி அண்ணே, இந்த கொடுமைய பாருண்ணே !!

அழகிரி அண்ணே, இந்த கொடுமைய பாருண்ணே !!

நாங்களும் எங்க ஊரு கார பொறம்போக்குகளும் "லெனின் , தொழிலாளர்" இந்த மாதிரி வார்த்தைக்கு மயங்கி அருவா சுத்தியளிலேயே ஓட்டு குத்தி பழக்க பட்ட ஜென்மங்க. ஆனா இப்ப அப்படி இல்லண்ணே. ஆயிரம் ஆயிரமா அள்ளி தர்ற நீ எங்க உண்டியல குழலுக்கும் ஆண்டி பயலுக எங்க.

அண்ணே , எங்க ஊரு மதுரை பஸ் ஸ்டாண்டுல ( பஸ் ஸ்டாண்டு எல்லாம் இன்னும் இருக்கானு கேக்க கூடாது. ) இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. போன தேர்தல் வரைக்கும் நம்ம ஊர சுத்தி இருக்குற எட்டு பட்டியும் மதுரை தொகுதி தான். எப்பவுமே செழிப்பாவே தேர்தல சந்திச்சு பழக்கப்பட்ட ஊரு. முன்னாடி எல்லாம் பிளாஸ்டிக் குடம், டப்பா இப்படி "மூணு பத்து ரூவா " சரக்க கொடுத்து ஓட்டு கேப்பானுங்க. அது பழைய காலம். இப்ப உங்க கிட்ட இருக்குற காசு அளுவுக்கு அப்ப யாரிட்டயாவது இருக்கனும்னா, பிரஸ் வச்சு அடிச்சா தான் உண்டு. அப்படி எதுவும் இல்லாம கவர்மெண்ட்டு அடிச்ச தாள வச்சே இம்புட்டு காசு சேக்க முடியும்னு புரட்சி பண்ணினவன் நீ தான் அண்ணே !!

இந்த தேர்தலுக்கு , இந்த கம்யுநிஸ்த்து பிச்கொத்தேல்லாம் மருதை தொகுதில இருந்தா நல்லதில்லைன்னு ( யாருக்குன்னு கேக்காத அண்ணனே, உனக்கு தான் ) எங்க பத்து பட்டி ஊரையும் எம்பது கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்குற விருதுனகரோட இணைச்சு புட்டாங்க அண்ணே. நீ செய்க்கனும். அது தான்னே எங்களுக்கு முக்கியம். இப்ப அந்த பக்கம் இருக்குற என்னோட சொந்த காரனுங்க எல்லாம் "எங்களுக்கு அண்ணனே மூணு வோட்டுக்கு மூவாயிரம் தந்தாரு, உனக்கு ? "அப்படின்னு கேள்வி கேக்குறப்ப என் மனசு தாங்க மாட்டேங்குது அண்ணே.

வைக்கோ அண்ணன் போன தேர்தலுக்கு நாப்பது பெட்டி வாங்குனாருனு செய்தி வந்துச்சு. அதுல ஒன்ன தெறந்து எங்கள மாதிரி ஆளுக்கு நூறோ எறநூறோ தந்தா கொறஞ்சா போவாரு ?? அவரு மகா கஞ்சன் அண்ணே. அவனுங்க எல்லாம் உங்கள மாதிரி வள்ளலா இருக்க உன்ட்ட ட்யூசன் படிக்கணும் ன்னே . பேச்சு மட்டும் நல்ல பேசுகிறார். எல்லாம் சவடால் பேச்சு தான். இந்த ஆளுக்கு ஒட்டு போட்டா - ஓசி ல ஓட்டு போட்டா என்னைய கேன பய்யன்னு சொல்ல மாட்டனுங்க !!?

விஷய காந்த் அண்ணன் தொப்புள்ள பம்ம்பரம் விட்டாரு, பாகிஸ்தான் தீவிர வாதிகள சுட்டு கொண்டாரு, கரண்டுக்கே சாக்கடிக்க வச்சாரு. இப்படி எதாவது யாருமே மறக்க முடியாம இருக்குறாப்ல கார்த்திக் செஞ்சிருக்காரா அண்ணே ? ஆனா அந்த ஆளுக்கும் எங்க ஒட்டு வேணும்மா. இந்த ஆள பார்த்தா எனக்கு சிரிப்பா வருதுன்னே!!

இப்ப நான் யாருக்கன்னே, ஓட்டு போடுறது!! உனக்கு ஓட்டு போடுரதுக்காகவே பிறந்த உடம்புனே. மொத தடவையா தாத்தா உன்ன நிக்க வச்சு அழகு பாக்குறாரு. ஆனா எங்கள வேற தொகுதி ஆக்கி அழ வச்சிட்டாரே.
எப்படியாவது யாருக்காவது போன் போட்டு - தந்தி அடிச்சு - கடுதாசி போட்டு எங்க தொகுதிய மதுரைக்கு மாத்துனே. இல்லாட்டி என்னை பட்டினி போட்டா பாவம் உனக்கு வந்திரும்ம்னே.

ராமதாஸ் அய்யா பற்றிய டாக்குமென்றி

மருத்துவர் அய்யா, தமிழ் குடி தாங்கி அவர்கள் பற்றிய ஒரு சிறு டாக்குமெண்டரி.






Saturday, June 14, 2008

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்
பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .
விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !
அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

Thursday, June 12, 2008

தசாவதாரம் படம் பார்ப்போர் - உணர்ச்சி கருத்துகள்


இதே மாதிரி உங்க ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளும் வந்துட்டா நல்ல இருக்கும் !!






எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது ?? ஒரிஜினல் ஓட சாயலே தெரியாம படம் பண்ணிருக்க !!








எங்க காலத்துல சீடி, டிவிடி, இன்டர்நெட் இப்படி எதுவுமே கிடைக்கல. சொந்தமா யோசிக்கவேண்டியதா போச்சு ...





இந்த போட்டோவுக்கு நீ 'ஓட்டி' கமெண்ட்டு எழுதிடுவியாடா??






தலைவா, கருப்பு சட்டையோட வந்து உங்கள மடக்கிடோம்ள. நம்மள பத்தி எதுவும் பேச முடியாது !!!

நன்றி
படங்களை வெளியிட்ட நன்றிக்குரியவர் சின்னகுட்டி